மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய பட்ஜெட், ஒட்டுமொத்த இந்தியாவுக்கானதாக இல்லாமல், மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக இருப்பதாக, முதலமைச்சர் விமர்சித்தார். தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை என்றும், தமிழ்நாட்டுக்கான ரயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். பாஜக அரசு, நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக் கொள்ள நினைப்பது வேதனைக்குரியது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.