தமிழ்நாடு

கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

Sinekadhara

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சரகத்திற்கு உட்பட்ட மதுபான கடையில் பணியாற்றிய துளசிதாஸ், ராமு ஆகியோரை கடந்த 4ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினர். இதில், துளசிதாஸ் உயிரிழந்த நிலையில், ராமு சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த நிலையில், துளசிதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்பத்திற்கு பொது நிவாரணநிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். துளசிதாஸ் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்த ராமுவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.