தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு - முதல்வர் விளக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு - முதல்வர் விளக்கம்

Sinekadhara

மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சட்டம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு என அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இந்த உள் ஒதுக்கீடு பொருந்துமா என உதகையில் செய்தியாளர்கள் முதல்வரிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.

அதற்கு முதல்வர் 7.5% உள் ஒதுக்கீடு என்பது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே என உதகையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.