நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார்.
நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு கொடியேற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழக தலைநகரான சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை சென்னை கோட்டைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் காலை 9 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா உரையாற்றினார். சுதந்திர தின விழாவை அடுத்து கோட்டை முழுவதும் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.