உழவர்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்திற்காக மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ளுமாறு உழவர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல் ரகங்களின் விதைகளை போதுமான அளவிற்கு இருப்பு வைக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூபாய் 600 மானியம் வழங்கப்படுவதாகவும், அதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.