தமிழ்நாடு

மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

Rasus

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மாதந்தோறும் இப்போது பெறும் 13 ஆயிரம் ஊக்கத் தொகை இனி 20 ஆயிரம் ரூபாயாக இருக்கும். முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு இது 25 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டய மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகையும் 25 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை முதல் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை 30 ஆயிரத்தில் இருந்து முறையே 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.