தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

webteam

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி ஜூலை ஒன்றாம் தேதியை கணக்கிட்டு, 2 சதவிகிதம் உயர்த்தி 9 சதவிகிதமாக வழங்கப்படும் என கூறியுள்ளார். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும். 

அத்துடன் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 157 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 250 ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயிரத்து 157 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதலைச்சர் கூறியுள்ளார்.