முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை” - பேரவை சிறப்புக்கூட்டத்தில் முதல்வர்!

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது.

PT WEB

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது.

முதல்வர் ஸ்டாலின்

இதில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “எனது உடல்நலனைவிட மாநில மக்களின் நலனே முக்கியம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் இங்கு நடக்கின்றன. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர்.

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும் இருக்கும்வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கியிருக்க வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரலாம்; மசோதா தொடர்பாக ஆளுநர் கோரிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்காமல் இருந்ததில்லை” என்றார்.