தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ.4000 நிவாரணம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு அனைத்து குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு தவணைகளாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ.4000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். திட்டத்தை தொடங்கிவைப்பதற்கு அடையாளமாக 5 பேருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார். இந்த திட்டத்தின்மூலம் 13,353 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.5.42 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.