தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 45வது சென்னை புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
புத்தக கண்காட்சியில் 5,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிக தொல்பொருள் கண்காட்சி அரங்கை முதலமைச்சர் பார்வையிட்டார். சிறந்த எழுத்தாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதை,
1.உரைநடை பத்திரிகையாளர்-சமஸ்.
2.நாடகம் பிரசன்னா-ராமசாமி.
3.கவிதை கவிஞர்-ஆசைதம்பி
4.புதினம்-வெண்ணிலா
5.பிறமொழி-பால் சக்கரியா
6.ஆங்கிலம்-மீனா கந்தசாமி ஆகியோர் பெற்றனர்.
பபாசி விருதுகளை,
1.சிறந்த பதிப்பாளர் விருது, மீனாட்சி சோமசுந்தரம மற்றும் ரவி தமிழ்வாணன்
2.சிறந்த புத்தக விற்பனையாளர் விருது -பொன்னழகு
3.சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது-திருவை பாபு
4.சிறந்த தமிழறிஞர் விருது-தேவிரா
5.சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர்-பாரதி பாஸ்கர்
6.சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான-கு.வை பாலசுப்ரமணியன் ஆகியோர் பெற்றனர்.
800அரங்குகளுடன், 1லட்சம் தலைப்பில் புத்தகங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியில் பங்கேற்க bapasi.com இணைய முகவரியில் நுழைவுச் சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்காக சென்னை பகுதி கல்வி நிறுவனங்களுக்கு 10லட்சம் இலவச டிக்கெட் வழங்க பபாசி முடிவுசெய்திருக்கிறது.
தொல்லியல் துறை சார்பில் 5000 சதுர அடியில் தமிழர்களின் பண்பாட்டை போற்றும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை என 19 நாட்கள் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.