தமிழ்நாடு

நான் மிகவும் நொறுங்கி உள்ளேன் -மாணவி சத்யாவை குறித்து மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர்

நான் மிகவும் நொறுங்கி உள்ளேன் -மாணவி சத்யாவை குறித்து மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர்

webteam

ஆண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம் ஆனால் அந்த வலிமை பெண்களை மதிக்கவும் பாதுகாப்பை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஏற்பாட்டில் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ கல்லூரியில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு, ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையினை வழங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

“ தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அறிவாற்றலும் தனித்திறமையும் சமூக நோக்கமும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக அவர்களை பெற்றோர் வளர்க்க வேண்டும். பாடப்புத்தகக் கல்வி மட்டுமல்ல சமூகக் கல்வியும் அவசியமானது. தன்னைப் போலவே பிற உயிர்களையும் மதிக்க பாதுகாக்க கற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்த முதல்வர், சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்க்கிறார்கள் என்பதை பரங்கிமலை சத்யா மாணவி உயிரிழப்பு சம்பவம் உணர்த்துகிறது.



சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை கண்டு மன வேதனைப்படுகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. ஆண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த வலிமை பெண்களை மதிக்கவும் பாதுகாப்பை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளும் பெற்றோரும் சேர்ந்து இளைய சக்தியை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்” எனக் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.