கேரள நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு தமிழகத்தை பூர்விமாக கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும் என கேரள முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளேன்
அத்துடன் நிலச்சரிவில் உயிரிழந்த தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தினரின் நேரடி வாரிசுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.