தமிழ்நாடு

199 இளநிலை உதவியாளர்கள்: பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

199 இளநிலை உதவியாளர்கள்: பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

rajakannan

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பள்ளி கல்வித்துறைக்கு 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.