தமிழ்நாடு

"தீபாவளிக்கு மதுக்கடைகளை மூடுங்கள்" பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

"தீபாவளிக்கு மதுக்கடைகளை மூடுங்கள்" பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

jagadeesh

மது இல்லாத தீபாவளியை தமிழக அரசு அறிவித்து பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் " மதுவில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் தமிழக அரசு வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இந்த தீபாவளிக்கு ஒரு சொட்டு மதுவைக் கூட பயன்படுத்த மாட்டோம் என்ற வைராக்கியத்தோடு பண்டிகையை கொண்டாடுவோம். 

இது குறித்து ஏற்கெனவே தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மதுக்கடைகளை மூடுவதே முதலமைச்சர் கொடுக்கும் தீபாவளி பரிசு. தீபாவளி பண்டிகையன்று அனைவரும் கதர் ஆடைகளை உடுத்தி கொண்டாடுவோம், ஏழை,எளிய மக்களுக்கு தீபாவளியன்று விருந்து படைத்தால் கடவுளே வந்து விருந்து உண்டதற்கு சமமாகும் என தெரிவித்தார்.