தமிழ்நாடு

மதுரையில் புதிய தமிழகம் கட்சி, வ.உ.சி. பேரவையினர் இடையே மோதல், கல்வீச்சு - போலீஸ் தடியடி

மதுரையில் புதிய தமிழகம் கட்சி, வ.உ.சி. பேரவையினர் இடையே மோதல், கல்வீச்சு - போலீஸ் தடியடி

webteam

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிய தமிழகம் கட்சியினருக்கும் - வ.உ.சி. பேரவையினருக்கும் இடையே மோதல் ஏற்படுட்ட நிலையில், அவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

பட்டியலினத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரில் அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுமென முதல்வர் பழனிசாமி அறிவித்தார். வேளாளர் பெயரில் அழைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அலங்காநல்லூரில் வ.உ.சி. பேரவையினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் மீது புதிய தமிழகம் கட்சியினர் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டதுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதில் பெண் ஒருவர் காயமடைந்தார். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் சென்றதால், வன்முறையை கட்டுப்படுத்த காவல் துறையினர் தடியடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மோதலில் ஈடுபட்டதாக கூறி புதிய தமிழகம் கட்சியினர் 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால் அங்கு 300 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.