மோதல் pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர்: கிராமசபை கூட்டத்தில் மோதல் - ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

webteam

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் 5 மற்றும் 7-வது வார்டுகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அதிகாரிகளின் முன்னிலையில் கலந்து கொண்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அப்போது சங்கர் என்பவருக்கும், 17 வயது சிறுவன் ஒருவருக்கும் இடையே கேள்வி எழுப்புவதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

clash

இதையடுத்து திடீரென இருவரும் கிராமசபை கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளின் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.