தமிழ்நாடு

கல்லூரியில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: நாகர்கோவிலில் பதட்டம்

கல்லூரியில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: நாகர்கோவிலில் பதட்டம்

webteam

நாகர்கோவில் அருகே பழவிளையில் கல்லூரியை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பழவிளையில் உள்ள கல்லூரியை நிர்வகிப்பதில் இருதரப்பினரிடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. நீண்ட கால பிரச்னையை அடுத்து ஒரு தரப்பைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அனுமதி பெற்று தனது ஆதரவாளர்களுடன் கல்லூரிக்குள் நுழைந்துள்ளார். மேலும் வேறு யாரும் கல்லூரிக்குள் நுழையாத வகையில் கதவையும் அடைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஏற்கனவே கல்லூரியை நிர்வகித்து வரும் கரிக்கோல் ராஜ் என்பவர் தலைமையில் மற்றொரு தரப்பினர் கல்லூரிக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். இதனால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. 

இருதரப்பினரும் ஒருவரை நோக்கி மற்றவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டன‌ர். உருட்டு கட்டைகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பையும் விரட்டி அடித்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.