செய்தியாளர்: ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கிழக்குமருதூர் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக, இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றபோது, சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி, சிலை சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து, இரு சமூகத்தினரிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள், சிலையை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த காவல் துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்குமருதூர் கிராமத்தில் பதற்றம் நிலவுவதன் காரணமாக, அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.