கோவை வந்தடைந்த துணை ராணுவப்படை புதிய தலைமுறை
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணி | கோவை வந்தடைந்தது துணை ராணுவப்படை!

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மேற்கு மாவட்டங்களுக்கு ரயில் மூலம் துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.

PT WEB

கேரளாவில் இருந்து நேற்று கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த துணை ராணுவப் படையினர் 276 பேரையும், கோவை மாநகர தேர்தல் பிரிவு காவலர்கள் வரவேற்றனர்.

கோவை ரயில் நிலையம் வந்த துணை ராணுவப் படையினர்

3 கம்பெனி துணை இராணுவ படையினர் வந்த நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு தலா ஒரு கம்பெனி வீரர்கள் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனர். ஒரு கம்பெனியில் 92 பேர் வீதம் 276 பேர் வந்துள்ள நிலையில், கோவை மாநகர காவல்துறையில் பணியாற்ற உள்ள துணை இராணுவப்படையினர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு காவல்துறை பேருந்து மூலம் சென்றனர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் தேர்தல் பணிக்கு 400 வீரர்கள் கேட்கப்பட்ட நிலையில், 92 வீரர்கள் கொண்ட ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் தற்போது வந்துள்ளனர். இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை ஓய்வில் இருப்பார்கள்.

கோவை வந்தடைந்த துணை ராணுவப்படை

தேதி அறிவிக்கப்பட்ட பின், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தலின்பேரில், பாதுகாப்பு, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.