தமிழ்நாடு

கொரோனா நிவாரண நிதி 2ஆம் தவணை ரூ.2000 - நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்

கொரோனா நிவாரண நிதி 2ஆம் தவணை ரூ.2000 - நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்

Sinekadhara

கொரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதில் முதல் தவணையாக ரூ.2000 மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணையை நாளை முதல்வர் தொடக்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அனைத்து பத்திரிகைகளுக்கும் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், ஜூன் 3ஆம் தேதியான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல்வாழ்விற்காக, கொரோனா இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய பையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  2.09 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இவை வழங்கப்படும். இதற்கு டோக்கன் வாங்கும் பணிகள் நாளைமுதல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.