திருவையாறு அருகே சோழர்கால கற்சிலை மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பெரும்புலியூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடிமராமத்து பணி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் பெரும்புலியூர் மடவாக்குளத்தை பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு தூர்வாரும் பொழுது, கடந்த 21 ஆம் தேதி சோழர்காலத்தில் செய்யப்பட்ட சுப்பிரமணியர், பைரவர் கருங்கல் சிலையும் மற்றும் சுமார் 1 அடியில் உள்ள ஆண்சாமி கருங்கல் சிலையும் கிடைத்தனர்.
இந்நிலையில் இன்று ஆழ்வார் கருங்கல் சிலை சுமார் 3 அடி உயரத்தில் கிடைத்துள்ளது. அச்சிலையினை திருவையாறு வருவாய்துறை அலுவலகத்திற்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வருவாய்துறையின் அலுவலர்கள் நேரில் சென்று சிலையை கைப்பற்றி தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், குளத்தில் சிலைகள் இருக்க வாய்ப்பு உள்ளது, அதனால் சிலை எடுத்த பகுதியில் மீண்டும் ஆழமாக தோண்டிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள.