தமிழ்நாடு

மயிலாட்டம்; ஒயிலாட்டம் ; பரத நாட்டியம் : நின்று ரசித்த சீன அதிபர்!

மயிலாட்டம்; ஒயிலாட்டம் ; பரத நாட்டியம் : நின்று ரசித்த சீன அதிபர்!

webteam

சென்னை வந்த சீன அதிபருக்கு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஸி ஜின்பிங் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சென்னை மண்ணில் கால் பதித்த சீன அதிபருக்கு ஆளுநர் பல்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

ஏர்போர்ட்டில் சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனைத்து நிகழ்ச்சிகளியும் சீன அதிபர் கண்டு ரசித்தார். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் கை அசைத்து உற்சாகப்படுத்தினார் ஜின்பிங். 

இதைத்தொடர்ந்து தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சொகுசு காரில் ஜின்பிங் கிண்டி கிரேண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.