பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக தனி விமானத்தில் சென்னை வந்தார் சீன அதிபர் ஸி ஜின்பிங்.
சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஸி ஜின்பிங் சென்னை வந்தார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர். மேளதாளங்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுடன் சீன அதிபருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிகப்பட்டது. சீன அதிபர் வருகையையொட்டி சென்னை முக்கிய சாலைகளில் பாதுகாப்புக்காக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேச்சு வார்த்தைக்காக பிரதமர் மோடி சென்னை வந்து கோவளத்தில் தங்கியுள்ளார். இன்று மாலை கோவளத்தில் பிரதமரை சந்திக்கிறார் ஸி ஜின்பிங். பின்னர், நாளை கோவளத்தில் உள்ள ஓட்டலில் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். இரு நாடுகள் வர்த்தக மேம்பாடு, எல்லையில் அமைதி உள்ளிட்டவை பற்றி 2 நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.