வெள்ள நீர் வடிந்து வேகமாக வாய்க்கால்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் எச்சரிக்கையும் மீறி ஆபத்தை உணராமல் குளித்து கும்மாளமிடும் சிறுவர்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் சென்று வருகிறது.
இதனால் குழந்தைகளை நீர் நிலைகளுக்கு அருகில் விட வேண்டாம் எனவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்ட மற்றும் துணி துவைக்க பாத்திரம் கழுவ நீர் நிலைகளுக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் அடுத்த மாமாகுடி பகுதியில் வேகமாக செல்லும் வாய்க்கால் நீரில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் என 10க்கும் மேற்பட்டோர் டைவ் அடித்து நீரில் உற்சாக குளியல் போடும் காட்சியை காண முடிந்தது.