விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் 23 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 வயது சிறுவனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 1100 வெளி நோயாளிகள் சிக்சைக்காக வரும் நிலையில் காய்ச்சல் அதிகளவில் காணப்படும் நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிக்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது 23 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெம்பக்கோட்டை அடுத்த முத்துசாமியாபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ஹரிஹரனுக்கு டெங்கு அறிகுறி உள்ளதால், 24 மணி நேர கண்காணிப்புடன் சிறுவனுக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக முழு உடல் மற்றும் ரத்த பரிசோதனை செய்து சிறப்பான முறையில் மருத்துவம் அளித்து வருவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன் தெரிவித்தார்.