தமிழ்நாடு

காவல்துறை பதவிகள் குறித்த ஆலோசனை: தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி டெல்லி பயணம்!

காவல்துறை பதவிகள் குறித்த ஆலோசனை: தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி டெல்லி பயணம்!

webteam

டிஜிபிக்கள், மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான பதவி உயர்வு வழங்குவது குறித்த ஆலோசனையில் பங்கேற்க தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபி டெல்லி சென்றுள்ளனர்.

தமிழக அரசின் உள்துறை இணை செயலாளர் முருகன், தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும் சட்டம்-ஒழுங்கு டிஜிபியுமான திரிபாதி ஆகியோர் இன்று காலை அவசரமாக விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர்.

காலை 6.30 மணிக்கு ஏா் இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து டில்லி புறப்பட்டுச் சென்றனா். அதைப்போல் இன்று காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா் ஆகிய இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனா்.

தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு, ஐபிஎஸ் அந்தஸ்து உயர்வு வழங்கப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய குழு தலைவர், தமிழக அரசு தலைமை செயலாளர், தமிழக அரசு உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு டிஜிபி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக காவல்துறையில் காலியாகும் டிஜிபிக்களின் பதவிகளை நிரப்புவது, புதிதாக டிஜிபிக்களுக்கான பதவி உயர்வு வழங்குவது, கூடுதல் டிஜிபிக்கள் பதவி உயர்வு, ஐபிஎஸ் அந்தஸ்து வழங்குவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை அனுமதி பெற வேண்டிய நடைமுறை. தமிழக அரசின் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர் பங்கேற்கும் பேனல் கமிட்டி கூட்டத்திற்கு அனுதி வாங்குவது தொடர்பான ஆலோசனையும் இந்த டெல்லி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற ஜூன் மாதத்துடன் டிஜிபி திரிபாதி ஓய்வு பெறவதை யொட்டி அடுத்த சட்டம் - ஒழுங்கு டிஜிபி யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.