தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்: யார் இடையூராக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம் - கே.பி.முனுசாமி

முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்: யார் இடையூராக வந்தாலும் ஒதுக்கிவிடுவோம் - கே.பி.முனுசாமி

webteam

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்: இதில் யார் இடையூராக வந்தாலும் ஒதுக்கி விடுவோம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஆதாலியூர் பகுதியில் அம்மா மினி கிளினிகை திறந்து வைத்த கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் ரவி, கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளரை தே.ஜ கூட்டணியின் தலைமையே அறிவிக்கும் என்று கூறிய கருத்துக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி , “அது ஒரு முகாந்திரம் இல்லாத கருத்து. எங்கள் தலைமை முடிவு செய்த எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர். ஓபிஎஸ் கூறிய வேதவாக்கு எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதிக்கிவைத்து விடுவோம்” என்றார்.

மேலும், “புதிய கட்சி தொடங்க வரும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆட்சி தான் அமைப்போம் என்று கூறுகிறார்கள். கலைஞர் என்று யாறும் கூறுவதில்லை” என்றார் கே.பி.முனுசாமி. அத்துடன், “பொங்கல் பரிசுகளை அரசு, அதிகாரிகள் முலம் தான் வழங்கிவருகிறது. அதிமுக மட்டுமே பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறது” என்று பொங்கல் பரிசு திட்டம் குறித்த விமர்சனங்களுக்கும் பதில் அளித்தார்.