தமிழ்நாடு

மஞ்சப்பை திட்டம்: ஒரேநேரத்தில் இரண்டு கைகள் கால்களால் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த ஆசிரியர்

மஞ்சப்பை திட்டம்: ஒரேநேரத்தில் இரண்டு கைகள் கால்களால் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த ஆசிரியர்

kaleelrahman

தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்கும் விதமாக கை மற்றும் கால்களால் ஒரே நேரத்தில் நான்கு ஓவியங்களை வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவனார்தாங்கல் என்னும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்கும் விதத்திலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் தன்னுடைய இரண்டு கைகளாலும், இரண்டு கால்களாலும் தனித்தனியாக நான்கு படங்களை வரைந்தார்.

அதில், கைகளால் முதல்வர் ஸ்டாலின் படம் மற்றும் மஞ்சப்பை படமும், ஒரு காலால் மரம் வளர்ப்பு படமும், மற்றொரு காலால் பிளாஸ்டிக் பை தவிர்த்தல் படமும் என ஒரே நேரத்தில் நான்கு ஓவியங்களை 40 நிமிடங்களில் வரைந்து அசத்தினார். ஓவிய ஆசிரியர் செல்வத்தை பொதுமக்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.