தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை விரைவில் முடிவடைய உள்ளதால் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்கலாமா, அப்படி நீட்டிக்கும்போது என்னென்ன புதிய கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பள்ளிகளில் வகுப்புகளை தொடர்ந்து இல்லாமல், சுழற்சி முறையில் நடத்து குறித்து முதல்வர் முக்கியாமாக ஆலோசிப்பார் என சொல்லப்படுகிறது. முன்னதாக இன்றைய தினம் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் திடீரென தொற்று உயர்ந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இவை தொடர்பாகவும் நாளைய ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஆலோசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளைய கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதனும் பங்கு கொள்வார் என சொல்லப்படுகிறது.