சென்னை பூவிருந்தவல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியின் இல்லத்திருவிழாவானது சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் ”இந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஆனால் எமர்ஜென்சியின் போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர்.
அதனால் ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக. அப்போது திமுக-வின் ஆட்சி கலைக்கப்படும் என்ற மிரட்டலுக்கு அடிபணியாமல் எதிர்த்தவர் கலைஞர். ஆனால் தற்போது நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியைக் கண்டு பாஜகவினர் அஞ்சுகின்றனர். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற சூழல் நிலவுகிறது.
தனக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் மிரட்டும் மத்திய அரசனானது அவர்களை எதிர்க்க விசாரணை அமைப்புகளை
அனுப்புகிறது. இது மட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. ’முதல்வர் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என மத்திய அமைச்சர் கூறுகிறார். செய்வதையெல்லாம் செய்துவிட்டு விசாரணை
கமிஷன் அமைக்கப்படும் என கூறுகிறார்கள். பாஜக-வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” என்று கூறினார்.
முதல்வர் பேசியவற்றை, கீழுள்ள வீடியோவில் காணலாம்.