தமிழ்நாடு

110 விதியின்கீழ் முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புகள்

110 விதியின்கீழ் முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புகள்

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை தற்போது பார்க்கலாம். 

1. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு சுமார் 2,371 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டு இத்திட்டட்தை நடைமுறைப்படுத்தும்.

2. நீர்வளம் குறைந்து வருவதை எதிர்கொள்வதோடு நீர் நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது, தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவது, கழிவு நீர் மறு உபயோகக்குழாய் கட்டமைப்பை தெரிவு செய்வது உள்ளிட்ட வழிமுறைகள் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கையை அரசு உருவாக்கும். 

3. 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்தகரிப்பின் மூலம் சுத்தகரித்து மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். 

4. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மாநகராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். 

5. 31 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு 7.35 கோடி செலவில் சுகாதாரப்பெட்டி வழங்கப்படும். 

6. 5,970 சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் 8.63 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 

7. 9, 915 சத்துணவு மையங்களில் சுமார் 4.96 கோடி ரூபாய் செலவில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும். 

8. 70 பெண் குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு புதிய கட்டடம் 1, 614 சதுர மீட்டர் பரப்பளவில் 5.28 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். 

9. சென்னை கெல்லீஸில் செயல்பட்டு வரும் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு கூடுதல் கட்டடங்கள் 4.53 கோடி செலவில் கட்டப்படும். 

10. 6 அரசு கூர்நோக்கு இல்லங்களை அவற்றுடன் தொடர்புடைய 16 மாவட்டங்களிலுள்ள இளைஞர் நீதிக் குழுமங்களுடன் காணொலிக் காட்சி மூலம் இணைக்கும் பணிகள் எல்காட் நிறுவனம் மூலம் 2.6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். 

11. மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் உதவியாளர்களை வைத்துக்கொள்ள மாதாந்திர பராமரிப்பு தொகையுடன் கூடுதலாக 1000 ரூபாய் உதவித்தொகை.

12. கூடுதலாக 10 மாவட்டங்களில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையங்கள் 2.65 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும். 

13. ஆவின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயனாளிகளுக்கு மானியமாக 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு பயனாளிக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.