தமிழ்நாடு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

webteam

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது கொரோனா நடவடிக்கை குறித்தும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் முதலமைச்சர் அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 6-வது முறையாக அறிக்கையை முதலமைச்சர் சமர்ப்பிக்க உள்ளார். முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோர் சென்றுள்ளனர். மேலும், அமைச்சர்கள் கே.பி.அன்ழகன், சி.வி.சண்முகம் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

மாதந்தோறும் இந்த சந்திப்பு நிகழும். வழக்கமாக 30 லிருந்து 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழும். ஆனால் வரும் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆலோசனை மேலும் சிறிது நேரம் நீடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.