தமிழ்நாடு

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி 

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி 

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2 ஆவது ஆலைக்கான கட்டுமானப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் நெம்மேலி கடல்நீ‌ரை குடிநீராக்கும் திட்‌டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2 ஆவது ஆலைக்கான கட்டுமானப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னைக்கு சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் சூழலில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் 2ஆவது ஆலை ரூ.1,250கோடியில் கட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். 

அதன்படி, இன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2ஆவது ஆலையின் கட்டுமானப்பணியை அடிக்கல் நாட்டி இன்று முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ரூ.1,250 கோடியில் கட்டப்படும் இந்த ஆலை மூலம் தினசரி 150 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பாகும் என கூறப்படுகிறது.