தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

webteam

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு, சூரியம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில், நாகை புதுப்பட்டினத்தைச் சேர்ந்த மாரிமுத்து, சிவகங்கை கழுகேர்கடையைச் சேர்ந்த சாதிக் அலி, திருவள்ளூர் நெமிலியைச் சேர்ந்த ராஜன், ஆறுமுகம், கொளத்தூர் துணைமின்நிலையத்தில் கம்பியாளராக பணிபுரிந்து வந்த ஆஞ்சிகான், நீலகிரி ஜெகதளா கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன், குன்னூர் அதிகரட்டியைச்சேர்ந்த மங்கம்மா, சேலம் எடப்பாடியைச் சேர்ந்த பாபு, திருவண்ணாமலை தச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிபிராஜ் ஆகியோர் பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அதேபோல், தஞ்சை வெண்டையன்பட்டியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் வீட்டின் அருகே விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தார்.

இந்த செய்திகளை கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். இந்த 11 குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்து இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரச்சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.