மாநில உரிமைகளை வழங்கும் அரசு, மத்தியில் அமையவில்லை என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி கோரிக்கைகளை பெற போராட வேண்டிய நிலை இருப்பதாக விமர்சித்தார். திமுகவின் 75ஆவது ஆண்டு பவள விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என கேட்கக்கூட முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார்.