தமிழ்நாடு

'முத்தமிழ் வளர்க்கும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுகிறது' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

'முத்தமிழ் வளர்க்கும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுகிறது' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

webteam

“கலை ஆர்வம் உள்ள நபர்கள், கலை திறமை உள்ள நபர்கள், நல்ல ஆசிரியர்களிடம் இருந்து கலைகளை கற்று கொண்டு கலைகளை காலம் எல்லாம் வளர்க்க துணை புரிய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர், ''நாட்டிய கலையை அரசு மட்டும் இல்லாமல் தனி நபர்களும் வளர்க்க வேண்டும். கலைஞர்களாக உள்ளவர்கள் புத்தகங்களை படிப்பதாலும், கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதாலும் மட்டும் கலைஞர்களாக மாறிவிட முடியாது. அநேக வருடங்கள் குருகுலத்தில் பயிற்சி பெற்றால் மட்டுமே கலைஞர்களாக மாற முடியும் என வழுவூரார் தெரிவித்துள்ளார்

கலை ஆர்வம் உள்ள நபர்கள், கலை திறமை உள்ள நபர்கள் நல்ல ஆசிரியர்களிடம் இருந்து கலைகளை கற்று கொண்டு கலைகளை எல்லாம் வளர்க்க துணை புரிய வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வளர்க்கும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுகிறது. கலை என்பது தமிழ் பண்பாட்டை காலம் காலமாக வளர்க்கும் செயலை செய்து வருகின்றன. தமிழும் தமிழ்நாடும் பல்லாண்டு காலம் நின்று நிலைக்க இத்தகைய கலை இலக்கியங்கள்தான் காரணம்.

இந்திய விடுதலைக்காக நாட்டிய கலைகளை பயன்படுத்தியதை போல இன்று இருப்பவர்களும் தமிழை காக்கவும், தமிழ்நாட்டை காக்கவும் தங்கள் கலைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். புதிய புதிய கலைஞர்கள் உருவாகுவது, புதிய பாடல்கள் இந்த மேடையில் ஒலிக்க வேண்டும். நவீன எண்ணங்களை இந்த கலையில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார்.