தமிழ்நாடு

"மாணவர்களுக்கு ஆட்சியர்கள் வழிகாட்டியாக திகழ வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"மாணவர்களுக்கு ஆட்சியர்கள் வழிகாட்டியாக திகழ வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Sinekadhara

மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் வழிகாட்டியாக திகழவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய முதலீடுகள் வருவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட சட்டம் ஒழுங்கு முக்கியம் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்றும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய முதலமைச்சர், மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது தயது தாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

"உங்கள் தொகுதியில் முதலமைச்சர் " துறையில், மக்கள் அளிக்கும் குறைகள், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்ற முதலமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.