தமிழ்நாடு

''அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன'' - கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

''அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன'' - கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

JustinDurai
’'அனைத்து மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன; வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம்' என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
 
சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ''எனது மனதிற்கு நெருக்கமான விழா இது. திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது.
நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள்; வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசு மட்டுமே மக்களுக்கான அனைத்தையும் வழங்கிவிட முடியாது; இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.