மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு 2 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பத்து முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும் 49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 219 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மதுரை மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது தங்களுக்கு பெருமை என்றும், மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மதுரையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில், பாதுகாப்பாக போட்டியை கண்டு களிக்கக்கூடிய வகையில், நவீன வசதியுடன் கூடிய நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் எனக் கூறினார்.
இதையும் படிக்கலாம்: 8 மாதங்களில் ரூ.1689 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் ஆக்கிரப்பிலிருந்து மீட்பு -மு.க.ஸ்டாலின்