தமிழ்நாடு

நெல்லையில் ரூ.15 கோடியில் பொருநை அருங்காட்சியகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லையில் ரூ.15 கோடியில் பொருநை அருங்காட்சியகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

JustinDurai
நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வுகளில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என தெரியவந்துள்ளது. கொற்கை துறைமுகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கீழடி அகழாய்வு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம். பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். அகழாய்வு பணிகளுக்கு ஏற்கனவே ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என அவர் கூறினார்.