தமிழ்நாடு

கடுமையாகும் ஊரடங்கு - முதல்வர் ஆலோசனை

Sinekadhara

ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துவது குறித்து டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.

கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதிமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் பொது முடக்கத்தை அமல்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு தராமல் தேவையில்லாமல் சாலைகளில் நடமாடுவதை செய்திகள் வாயிலாக பார்த்துவருகிறோம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு விதிகளை பலர் பின்பற்றாத சூழலில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.