மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி web
தமிழ்நாடு

இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து பேசுவதற்காக இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Rishan Vengai

இன்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின், மாலை ஆளுநரை சந்தித்து நிலுவை மசோதா குறித்து பேசவிருக்கிறார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் தென் மாவட்ட பேருந்துகளால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், அதனை தவிர்க்கும் பொருட்டு சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் கூடிய இந்த பேருந்து நிலையத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என பெயரிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

வேலை முடிந்தும் நீண்டநாட்களாக திறக்கப்படாமல் இருந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீதான ஒப்புதல் குறித்து பேசுவதற்கு இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசவிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் ரவியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீடித்துவந்த மோதல் போக்கு காரணமாக நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் நிலுவையில் இருந்துவருகின்றன. இதனால் ஆளுநர் வேண்டுமென்றே சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம் இருவரும் சுமூகமாக பேசி தீர்வுசெய்துகொள்ள அறிவுறுத்தியது. இந்நிலையில்தான் இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்.

Stalin-Ravi

ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்திக்கவிருக்கும் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.