தமிழ்நாடு

‘அம்மா’ படப்பிடிப்பு த‌ளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்

‘அம்மா’ படப்பிடிப்பு த‌ளம் அமைக்க ரூ.1 கோடி - காசோலை வழங்கிய தமிழக முதல்வர்

webteam

புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு த‌ளம் அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் காசோலையை சென்னை தலைமைச் செய‌‌‌லகத்தில்‌‌,‌ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்னிந்திய திரைப்ப‌ட தொழிலாளர்‌ சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே. செல்‌வமணியி‌டம் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் திறப்பு விழாவில்,‌ ஜெயலலிதா பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்புத் தளத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அம்மா படப்பிடிப்பு த‌ளம் அமைப்பதற்காக, முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் காசோலையை தென்னிந்திய திரைப்ப‌ட தொழிலாளர்‌ சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே. செல்‌வமணியி‌டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.‌ 

அப்போது செய்தி ‌மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்‌ கடம்பூர் ‌ராஜு, தலைமைச்‌ செயலாளர் சண்முகம் மற்றும் தென்னிந்திய திரைப்ப‌ட தொழிலாளர்‌ சம்மேளத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.