தமிழ்நாடு

370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

webteam

370 அரசு புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சென்னையில் தொடங்கி வைத்தார். 

போக்குவரத்து கழகங்களுக்கு அரசு புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி ரூ.109 கோடி மதிப்பீட்டில் 8 போக்குவரத்து கழகங்களுக்கு 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 65 பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 30 பேருந்துகள், கோவை -104 பேருந்துகள், சேலம் -57, கும்பகோணம் -41 பேருந்துகள், விழுப்புரம் -27, நெல்லை 26, மதுரை -20 பேருந்துகள் என 370 பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளன.