எஸ்.வி.சேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என முதலமைச்சர் பழனிசாமி சாடியுள்ளார்.
திண்டுக்கல்லில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திண்டுக்கல்லில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்தேன். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடரும். நயினார் நாகேந்திரன் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்.
எங்களுக்கு இந்தி தெரியும் என்பது எஸ்விசேகருக்கு எப்படி தெரியும். அவர் முதலில் எந்த கட்சி? அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது எப்போதும் அவர் வந்ததே இல்லை. ஏதாவது கருத்து சொல்லிவிட்டு வழக்கு வரும்போது ஓடி ஒளிந்து கொள்வார். கு.க.செல்வம் பேசுவது அவர்களது உட்கட்சி பூசல். இபாஸ் வழங்குவதில் எந்த தடையும் இல்லை. முறையான ஆவணங்கள் தாக்கல் செய்து இபாஸ் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.