தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. எனவே ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பே இதுகுறித்த ஆலோசனை நடைபெற்றது. அதில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் தளர்வுகளற்ற ஊரடங்கையும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மளிகைக்கடைகள் நேரம் அதிகரித்தல் மற்றும் பத்திர பதிவு அலுவலகங்களுக்கு அனுமதி போன்ற சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று கூறப்பட்டது.
இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த அர விரைவில் வெளியாகவுள்ளது.