தமிழ்நாடு

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்

webteam

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணி இடம்பெற்றுள்ளது. கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இரண்டு தொகுதிகளை பெற்றுள்ள விசிக, சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து அவர் களம் காணுகிறார். 

திமுக கூட்டணியில் இருந்தாலும், தங்கள் கட்சியின் தனித்துத்தை நிலைநிறுத்த சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக மோதிரச் சின்னத்தை அவர்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தது. ஆனால், அந்தச் சின்னம் வழங்கப்படவில்லை. இதனால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு சின்னம் தர தாமதப்படுத்துவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையே விழுப்புரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதற்கு பானைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மோதிரம், வைரம், பாலப்பழம் ஆகிய சின்னங்களை விசிக கோரியிருந்த நிலையில், பானைச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.