குழந்தை கடத்தல் pt desk
தமிழ்நாடு

சென்னை: “அரசு நிதி உதவியை பெற்றுத் தருகிறேன்” எனக்கூறி பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை கடத்தல்!

கண்ணகி நகரில் அரசு நிதி உதவி பெற்றுத் தருவதாகக் கூறி பெண் ஒருவர் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியதாஸ் - நிஷாந்தி தம்பதியர். இவர்களுக்கு பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை உள்ள நிலையில், “அரசு நிதி உதவி வாங்கித் தருகிறேன்” என நம்பும்படி பேசி நிஷாந்தியை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளது ஒரு கும்பல். அழைத்துச்சென்று தியாகராய நகரில் ஒரு ஓட்டலில் சாப்பிட வைத்து நிஷாந்தி கைகழுவச் சென்ற போது அவரது குழந்தையை தூக்கிக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பெண்ணை கண்ணகி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தை

சம்பவத்தின்படி கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 11) அன்று நிஷாந்தியின் வீட்டிற்கு வந்த அந்த பெண், 200 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், குழந்தையின் தாய் சரிவர பேச மறுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.