தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பக்காற்று வீசும் - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பக்காற்று வீசும் - தமிழ்நாடு வெதர்மேன்

webteam

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்

ஃபோனி புயல் காற்றின் ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துச் சென்றதால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானது. இதன் விளைவாக, பொதுமக்கள் அதிகளவில் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் கத்திரி வெயிலும் தொடங்கியது. ஏற்கெனவே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கத்திரி வெயிலின் காரணமாக தாக்கம் இன்னும் அதிகமானது. நேற்று மாலை சென்னை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் வரும் சில நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களில் வெப்ப அலை அதிகமாக இருக்கும்.

வட உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை கடுமையான வெப்பம் நிலவும். மாலை நேரங்களில் மேகமூட்டம் காணப்பட்டாலும் அது பெரிய அளவில் மழையை கொடுக்காது என்று தெரிவித்துள்ளார்.