கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த 50 திருநங்கைகள் ஒருவருக்கு 1000 ரூபாய் வீதம் பங்களித்து மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருநங்கைகள் பலரும் கொரோனா பேரிடரில் வாழ்வாதாரத்துக்கு போராடி வரும் சூழலிலும், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக நிதி திரட்டி அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.